பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான விருதுகள்

நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் திறன்களை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ஆம் தேதி அன்று 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதிற்குட்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு மாநில விருதாக ரொக்க பரிசு ரூபாய் ஒரு இலட்சம் காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமான பிப்ரவரி 24 அன்று ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் சான்றிதழ்களும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.