மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம்

மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம்

முதியவர்களின்  வாழ்க்கைத்  தரத்தை மேம்படுத்த மத்திய அரசினை சமூக நீதி  மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் திட்டத்தைச் செயல்படுத்துதல்

 முதியோருக்கு  தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அரசு / அரசு சாரா நிறுவனங்கள். ஊராட்சி அமைப்புகள்/உள்ளாட்சி அமைப்புகளின் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம் பயனுள்ள ஆக்கப்பூர்வமான முதுமை வாழ ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

முதியோருக்கான  ஒருங்கிணைந்த திட்டம்

       முதியவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (IPSrC) என்பது ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் மத்தியத் துறை திட்டமாகும்.  முதியோருக்கு  தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அரசு / அரசு சாரா நிறுவனங்கள். ஊராட்சி அமைப்புகள்/உள்ளாட்சி அமைப்புகளின் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம் பயனுள்ள ஆக்கப்பூர்வமான முதுமை வாழ ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நோக்கங்கள்:

பின்வரும் நோக்கங்களுக்காக மேலே குறிப்பிட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/ பிற அமைப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது:

  1. முதியவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிகழ்ச்சிகள், குறிப்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதார உதவி அளிக்கும் திட்டங்கள்.
  2. குழந்தைகள்/இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கிடையேயான தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளை உருவாக்கி வலுப்படுத்துவதற்கான திட்டங்கள்.
  3. ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள முதுமையை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள்.
  4. முதியோர்களுக்கு நிறுவன மற்றும் நிறுவன சாராத பராமரிப்பு/ சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள்.
  5. முதுமை களத்தில்  ஆராய்ச்சி/பரிந்துரை  மற்றும் விழிப்புணர்வை உருவாக்கும் திட்டங்கள்; மற்றும்
  6. முதியவர்களின் நலன் குறித்த பிற திட்டங்கள்.

தகுதி வரம்பு

  • தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்ட சங்கம் / பொது அறக்கட்டளையாக இருக்க வேண்டும், தகுந்த சங்க விதிகள்/ நோக்கங்கள் & குறிக்கோள்கள் திட்ட குறிப்பில் தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஜனநாயகக் கொள்கைகளின்படி அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்ட மற்றும் எழுதப்பட்ட அரசமைப்பில் வகுக்கப்பட்டவாறு, முறையாக  அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவை  கொண்டிருக்க வேண்டும். இது ஒரு  தகுதியான  நிர்வாக அமைப்பு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட நிர்வாக / செயற் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.
  • தொடர்புடைய சேவைத் துறையில் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இத்தகைய திட்டங்களைக் செயல்படுத்திட உறுதிப்படுத்தப்பட்ட அறிமுக ஆவணங்கள் மற்றும் திறன்களுடன் லாபத்திற்காக இயங்கக்கூடாது.

மத்திய மானியம் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்) பெறுவதற்கான விண்ணப்பங்களின் தகவல், பதிவு மற்றும் இணையவழி செயலாக்கத்திற்கு மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகலாம்-www. grants – msje.gov.in