அனைத்து துறைகளிலும் பாலின வரவு செலவு திட்ட பிரிவு உருவாக்கம்
தமிழகத்தில் பாலின வரவு செலவு திட்டத்தை உறுதி செய்திடும் வகையில் அனைத்து துறைகளிலும் பாலின வரவு செலவு திட்ட பிரிவு உருவாக்கப்படும் என்று 21.04.2022 அன்று மாண்புமிகு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அரசாணை (நிலை) எண்: 38, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நாள் : 08.07.2022-ன்படி, அனைத்து துறைகளிலும் பாலின வரவு செலவு திட்ட பிரிவு உருவாக்குவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளன. திட்டம் மற்றும் வளர்ச்சி துறையுடன் இணைந்து பாலின வரவு செலவு திட்ட பிரிவு அமைத்திட அறிவுறுத்தி அனைத்து துறைகளுக்கும் அரசு கடித எண் : 7148/சந2(2)/2002 நாள் : 16.05.2022-ன் அனுப்பப்பட்டுள்ளன.






